சிவனொளிப்பாதம் புனிதத்தல யாத்திரை ஆரம்பம்
சிவனொளிப்பாதம் அல்லது சிவனடிபாதம் அல்லது சிங்களவர்களால் ஸ்ரீபாத என்றழைக்கப்படும் புனிதத்தல யாத்திரை எதிர்வரும் புதன்கிழமை, பூரணைத்தினத்தன்று ஆரம்பமாகிறது.
இது 2023 மே மாதம் பூரணை தினம் வரை நீடிக்கும்.
யாத்திரை
இதனை முன்னிட்டு, புனித திருமஞ்சனம், திருவுருவங்கள் மற்றும் சிலைகள் அடங்கிய வாகனப் பேரணி பெல்மடுல்ல கல்பொத்தவல ஸ்ரீபாத ரஜமஹா விஹாரையில் இருந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (6) புறப்பட்டவுள்ளது.
அன்று மாலை நல்லதண்ணியை வந்தடைந்து, உந்துவப் பூரணைத் தினத்தன்று அதிகாலை அங்கிருந்து ஊர்வலமாக சிவனொளிப்பாத மலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கை
மேலும் மூன்று ஊர்வலங்கள் எரத்ன, பலபத்கல மற்றும் பொகவந்தலாவ பாதைகள் ஊடாக வந்து ஹட்டன் பாதையில் இணையவுள்ளன.
இந்தநிலையில் யாத்திரையை முன்னிட்டு, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்ட
செயலாளர்கள் பொலிஸார், பாதுகாப்பு தரப்பினர், அரச நிறுவனங்களின் உதவியுடன்
யாத்திரிகர்களுக்கு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
