காணாமல்போனோருக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை கட்டாயம் தேவை! - சிவாஜிலிங்கம் வலியுறுத்து

Srilanka MK Sivajilingam
By Rakesh Aug 30, 2021 01:46 PM GMT
Report

சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம் தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க முடியும். அதனைப் பெறுவதற்கு நாங்கள் முனைப்புக் காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

இன்று உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அதையொட்டி அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதுவரை தமிழ்த் தரப்பில் இருந்து கட்டாயமாகக் காணாமல் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரம் என ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கை இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம். போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வடக்கு, கிழக்கின் பல இடங்களிலே 600 பேருக்கு மேற்பட்டோர் காணாமல்போயிருக்கின்றார்கள். 1996ஆம் ஆண்டில் காணாமல்போனோர் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அஞ்சப்படுகின்ற சூழ்நிலையிலே தான் 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின் சுமார் 6 ஆயிரத்து 500 பேரை இராணுவத்தினரிடம் அவர்களது மனைவிமாரோ, பெற்றோரோ, சகோதரர்களோ கையளித்தவர்களைப் பற்றி கூட இன்னும் எந்தவிதமான தகவல்களும் இல்லை.

இந்தச் சூழ்நிலையின் பின்தான் இவர்களைக் கண்டுபிடிக்க எத்தனை குழுக்களை நியமித்து இருந்தாலும் அதிலிருந்து அரச தரப்பினர் பின்வாங்கினார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலே 30/1 என்ற தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை வழங்கியதாக இலங்கை அரசு சொன்னாலும் அதன் பிறகு அவர்கள் பின்வாங்கினார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளைத் தேடி வருடக் கணக்கில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்றைக்கு ஏறக்குறைய 2 ஆயிரம் நாட்கள் வீதிகளில் இருந்து போராடி வருகிறார்கள்.

சர்வதேச ரீதியான விசாரணைகள் மூலம்தான் நீதி கிடைக்க முடியும். அதனைப் பெறுவதற்கு நாங்கள் முனைப்புக்காட்ட வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளிகளை நிறுத்தாத வரை இதற்கான நீதி கிடைக்க வாய்ப்பில்லை. இல்லாவிட்டாலும் கூட அதை நோக்கிப் பயணிக்கின்ற விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியப்படுத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றுள்ளது.

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US