ஷிரந்தி ராஜபக்ச தத்தெடுத்த பிள்ளைகள் எங்கே! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மனித உறுப்புகள்
ராஜபக்சக்களின் காலத்தில் ஷிரந்தி ராஜபக்ச தத்தெடுத்த பெண் பிள்ளைகள் தற்போது எங்கே என சமூக செயற்பாட்டாளர் பிரவீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிசி தமிழின் தொகுப்பு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஷிரந்தி ராஜபக்ச தத்தெடுத்த பெண் பிள்ளைகள் எங்கே என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள், புலனாய்வுத் துறையினர் இந்த விடயத்திலே கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்திலே வடக்கு, கிழக்கிலே பலரை சுட்டு கொண்டிருக்கின்றார்கள் ,கடத்தி காணாமல் ஆக்கி இருக்கின்றார்கள்.பல வீடுகளினுடைய வாசல்கள் தோறும் வெள்ளை வான்கள் வந்து நின்ற காலப்பகுதியினுடைய நாயகர்கள் இவர்கள்.
ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் மனித உடலின் அவயங்கள் வெளிநாடுகளிற்கு விற்கப்பட்டன.
ஆகவே, ஷிரந்தி ராஜபக்ச தத்தெடுத்த பெண் குழந்தைகள் எங்கே என்பது தொடர்பில் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri