அடுத்தக் கைது பட்டியலில் ஷிரந்தி! நாமலுக்கு எதிராக பின்னப்பட்டுள்ள வலை..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ஐன்ஸ்டின் தாஹா தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாமலுக்கு பின்னப்பட்டுள்ள வலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேலும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டவர்கள் என்ற பட்டியிலில், கடந்த கால அரசியல்வாதிகள், அவர்களுடைய பாரியார்கள், பிள்ளைகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அவற்றுள் சாட்சியங்கள் சாதகமாக இருக்கக் கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இதன்படி, நாமல் ராஜபக்ச அந்த விடயங்களில் தொய்வடைந்துள்ளார். தனக்கு சரியான ஒரு வலை பின்னப்பட்டுள்ளதாகவும், அதற்குள் தான் சிக்கப் போவதாகவும் அவர் நன்றாக அறிந்திருக்கின்றார்.
அந்தப் பட்டியலில், அவருடைய தாயாரான ஷிரந்தி ராஜபக்சவும் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளார். சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார்.
இதன்படி, 40 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பாக அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், அது குறித்து சரியான விளக்கங்களை, சாட்சியங்களை வழங்குவதற்கு ஷிரந்தி ராஜபக்ச தவறுவாராயின் அவர் கைது செய்யப்படுவதற்கோ, அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கோ வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam