வெளிநாட்டில் தலைமறைவாகும் ஷிரந்தி - காப்பாற்ற ராஜபக்சர்கள் எடுத்து அனைத்து முயற்சிகளும் தோல்வி
சமகால அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவை இலங்கையில் தனித்துவிட்டு, ரோஹித ராஜபக்சவின் மாமியார் மற்றும் பாதுகாப்பாளர்களுடன் சிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளமை மருத்துவ சிகிச்சைக்காக மாத்திரமா என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிதி முறைகேடுகள்
கால்டன் மழலையர் பாடசாலைக்க வழங்கப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகளின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியில் பெறப்பட்ட 100 மில்லியன் ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்தியமை தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் சிரிலிய சவிய கணக்கு மோசடி மற்றும் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில் ஷிரந்தி கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக ராஜபக்ச குடும்பத்தின் இளைய மகன் உள்ளிட்டோர் பிக்குகளின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விடுத்த மனிதநேய கோரிக்கைகள் தோல்வியடைந்துள்ளன.
நாட்டில் ஏற்பட்ட கொதிநிலை
சிங்கப்பூரில் 30 நாட்கள் சுற்றுலா விசா காலம் முடிந்தவுடன் பல நாடுகளுக்கு இடமாறி தப்பிக்க வழிமுறைகள் தேடப்பட்ட வருவதாக தெரிய வந்துள்ளனர்.

நோய்வாய்ப்பட்டுள்ளதாக கூறிச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க ஷிரந்தி ராஜபக்ச கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டில் ஏற்பட்ட கொதிநிலை அடுத்து சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற நிலையில், அங்கிருந்து வேறு நாடுகளுக்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this video
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri