இலங்கையில் ஆபத்தான நபர்..! ஐரோப்பாவில் பல கோடி ரூபா சொத்துக்கள் - விசாரணையில் பகீர் தகவல்கள்
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிற்கு வெளிநாடுகளில் பல சொத்துக்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வணிக நடவடிக்கை
ஷிரான் பாசிக் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு அந்த வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, சந்தேகநபருக்கு டுபாயில் 1.5 கோடி ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள ஜீப் வாகனம் ஒன்றும் உள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு இலங்கையிலும் பல கோடி ரூபா சொத்துக்கள் உள்ளமை குறித்தும் கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவற்றுள் கொழும்பு கடற்பாதை வீதியில் அமைந்துள்ள சில ஹோட்டல்களும், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையங்களும் மற்றும் பல சொத்துக்களும் அடங்குகின்றன.