விடுதியொன்றில் மர்மான உயிரிழந்த நபர் - 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்
அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட விகாரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்த 67 வயதான ரோகன் அரியதிலகே என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பெந்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் சிற்றுண்டி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் கண்டுபிடிப்பு
இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, அது மிகவும் சிதைந்து, வீங்கி, துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, உயிரிழந்த நபரின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த ஒருவர் சென்று பார்த்தபோது, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening