அரசுடைமையாகும் சொத்துகள்! உள்நாட்டில் - வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் இலங்கை பொலிஸாரின் அவசர அறிவிப்பு
உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால் 1818 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் (25.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அரசுடைமையாகும் சொத்துக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக மொத்தம் 3878 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடைமையாக்க தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு பின் அவை முழுமையாக அரசுடைமையாக்கப்படவுள்ளன.
இதனிடையே, கடந்த 2025 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நாடளாவிய விசேட நடவடிக்கையின் கீழ் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரத்தியேகத் தொலைபேசி இலக்கம்
இதேவேளை, உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எவரேனும் சட்டவிரோதச் செயல்கள் குறித்த தகவல்களை வழங்க விரும்பினால், 1818 என்ற பிரத்தியேகத் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்.
பெறப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவரும் சட்டவிரோத வழிகளில் தமது சொகுசு வாழ்க்கைக்காக எத்தகைய சொத்துக்களையும் அனுபவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9