பதற்றத்தினால் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி! நடுக்கடலில் நடுவே சிக்கி தவிக்கும் கப்பல்கள்
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், நடுக்கடலில் சிக்கியுள்ள கப்பல்களில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அதிரடியாக மூடியுள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு! பொருட்களை வாங்குபவர்களுக்கு பரிசு அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தி மூடல்
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், 3,200 வணிகக் கப்பல்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளன.

போர் தொடர்ந்து நடந்து வருவதால் பாரசீக வளைகுடா பகுதியில் நடுக்கடலில் சிக்கி தத்தளிக்கும் கப்பல்களில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உணவு, தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து உதவி கேட்டால், துறைமுகங்களை தொடர்பு கொள்ளும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
இதனால் கடற்றொழிலாளர்கள் கப்பல்களைக் கைவிட்டு வெளியேறத் தொடங்கினால், கடலில் தத்தளிக்கும் ரசாயன மற்றும் எண்ணெய் கப்பல்களால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.