ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்லும் கப்பல்கள் குறித்து ஈரானின் புதிய அதிரடி அறிவிப்பு
முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கப்பல்களுக்கு அனுமதி
மேலும் தெரிவிக்கையில், எமது அதிகாரிகளுடன் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்றார்.

அத்துடன் கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 12 நாட்கள் நீடித்த போரின் போது, ஈரானின் பல அணுசக்தி மற்றும் இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது.
அவர்கள் நிறுத்தச் சொன்னார்கள், அதனால் நாங்களும் நிறுத்தினோம். ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் இந்த போரை ஆரம்பித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam