போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இலங்கை வரும் உக்ரேன் கப்பல்
உக்ரைனில் இருந்து இலங்கைக்கு 49500 தொன் கோதுமை ஏற்றிய கப்பல் உக்ரைன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர சோளம், கடலை, சூரியகாந்தி விதைகளை ஏற்றிச் செல்லும் மேலும் மூன்று கப்பல்கள் மூன்று நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
MV Leo I 49 கப்பலில் 500 டன் கோதுமையை இலங்கைக்கு எடுத்து வருகின்றது.
MV True Harmony 25 கப்பல் 900 தொன் மக்காச்சோளத்தை எகிப்துக்கு எடுத்துச் செல்கிறது.
MV MKK 1 கப்பல் மூலம் 13,000 தொன் கொண்டைக்கடலையை துருக்கிக்கும், MV Bomustafa O கப்பலில் 500 தொன் சூரியக்கிழங்கு விதைகளை பிரித்தானியாவுக்கும் எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வரும் இந்தக் கப்பல்கள் அங்கிருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.