இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொரு எரிபொருள் கப்பல் : விநியோகிக்கும் முறை குறித்து இன்று தீர்மானம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி 32,000 லீற்றர் எரிபொருளை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார தெரிவிக்கையில், இந்த கப்பலில் 32,000 லீற்றர் டீசலும், 8,000 மெட்ரிக் டொன் ஜெட் ஏ-1 (Jet A-1) வானூர்தி எரிபொருளும் கொண்டு வரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை
இதேவேளை, இன்றைய தினமும் நாளைய தினமும் ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகள் என்பதால், நாளை எரிபொருள் விநியோகிக்கும் முறை குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக மயூரு நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் 0, 2, 4, 6, 8 ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், கடைசி இலக்கம் 1, 3, 5, 7, 9 ஆக இருந்தால் ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam