எரிபொருட்களுடன் இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பல்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டை குறைக்கும் முகமாக இன்று எரிபொருட்களைத் தாங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 37,500 மெற்றிக் டன் பெட்ரோல் அடங்கிய கப்பல் ஒன்றும், தலா 20,000 மெற்றிக் டன் டீசல் மற்றும் விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கப்பல்களில் உள்ள எரிபொருளைத் தரையிறக்குவதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் 30,000 மெற்றிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றும் இன்று அல்லது நாளை நாட்டை வந்தடையவுள்ளது.
இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ள எரிபொருட்களால் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர்.ஒல்கா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 5 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
