ஆராய்ச்சிக் கப்பல் விவகாரம்: இலங்கையிடம் சீனா விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் தமது ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலை (Shi Yan 6) நிறுத்துவதற்குச் சீனா அனுமதி கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரியங்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஷி யான் 6 கப்பல் வருகைக்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் பிரியங்க விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்ற யுவான் வாங் 5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல், அம்பாந்தோட்டைக்கு வந்தபோது, இந்தியா தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்தியாவின் சந்தேகம்
இதனையடுத்து, இலங்கை கடற்பரப்பில் இருக்கும்போது எந்தவொரு ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று சீனாவிடம் இலங்கை அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இந்தியாவின் அதிருப்தியை நிவர்த்தி செய்ய முயற்சித்துள்ளது.

இதேவேளை இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதையும் இலங்கையில் அதன் செல்வாக்கையும் இந்தியா சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam