இலங்கையில் கால் பதித்த அமெரிக்காவின் முதல் எரிபொருள் நிலையம்
அமெரிக்காவின் RM Parks’ Shell எரிபொருள் நிலையம் இன்று (26) அம்பத்தலை பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் குறித்த எரிபொருள் நிலையத்தைத் திறந்து வைத்துள்ளார்.
இலங்கையில் 150 நிலையங்களுடன் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட முதல் RM Parks’ Shell எரிபொருள் நிலையத்தைத் திறப்பதில் பெருமைப்படுவதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
புதிய எரிபொருள் நிலையம்
இந்த முதலீடு, இலங்கையின் சந்தைக்கு நம்பகமான எரிபொருள் வழங்குநரைச் சேர்க்கிறது மற்றும் அமெரிக்காவையும் இலங்கையையும் மேலும் நட்பு கொள்ள வைக்கிறது என்றும் தூதர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய எரிபொருள் நிலையம் அனைத்து இலங்கை ஓட்டுநர்களுக்கும் அதிக தரம் மிக்க தயாரிப்புகளை வழங்குகிறது.
அத்துடன், வசதியான கடைகள், சிற்றுண்டி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் வழங்கும் நிலையமாகவும் இந்த நிலையம் விளங்கும் என்று அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவை பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், வளமானதாகவும் மாற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கையில் நடைபெறும் நிகழ்வு, இது என்றும் தூதர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
