பிரித்தானியாவில் சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Final War United Kingdom Sri Lankan political crisis
By Chandramathi Jul 26, 2023 07:00 AM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் எல்தம்(Eltham) பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கீலீவ் எபேட் எம்.பியுடன் (Hon. Clive Efford MP) இராஜதந்திர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று (25/07/2023) காலை 10.00 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் தொழில்கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் சென் கந்தையா, ICPPG அமைப்பின் சார்பில் சுபமகீஷா வரதராசா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

சித்திரவதைக்குள்ளானவர்கள் நேரடி சாட்சி

பிரித்தானியாவில் சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! | Shavendrasilva Global Human Rights Sanction Regime

அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான லோஐனன் தர்மலிங்கம், பபிஷன் போல்ராஜ், நிலக்ஐன் சிவலிங்கம், அனுஷன் பாலசுப்பிரமணியம் மற்றும் துஷாந்தன் செல்வரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கீத் குலசேகரத்தின் உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.

ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு(FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர் மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதையும் விவரித்துள்ளார்.

பிரித்தானியாவில் சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! | Shavendrasilva Global Human Rights Sanction Regime

தடை விதிக்க தயக்கம்

தொடர்ந்து உரையாற்றிய சென்கந்தையா, இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தடை விதிக்க தயக்கம் காண்பிப்பது ஏன் என்று வினவினார்.

பிரித்தானிய எதிர்கட்சி தலைவர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும் என கூறியதை வரவேற்பதாகவும் அதேபோன்று இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் என வழியுறுத்தினார்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், அதனை பிரித்தானிய அரசு ஏற்றுக்கொள்ள தன்னாலான அழுத்தம் வழங்கவும் சம்மதித்தார்.

அத்துடன் தமிழருக்கான மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக்களில் (APPGT) இணையவும், FCDO விற்கு தனது தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


Gallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
அகாலமரணம்

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல், Drancy, France

03 Nov, 2019
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா

05 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, கனடா, Canada

07 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி தெற்கு, Manor Park, United Kingdom

09 Nov, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Watford, United Kingdom

08 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

09 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, உதயநகர்

07 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, மீசாலை, வவுனியா

21 Oct, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Karlsruhe, Germany

05 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் கிழக்கு, பேர்ண், Switzerland

09 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, Davos, Switzerland, Thusis, Switzerland

21 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, பருத்தித்துறை

02 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புத்தளம், Scarborough, Canada

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கலட்டி, Brampton, Canada

06 Nov, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Nigeria, Hayes, United Kingdom

26 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, சூரிச், Switzerland

07 Nov, 2009
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, நீர்வேலி, Markham, Canada

02 Nov, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US