மீண்டும் இலங்கையில் கடும் கட்டுப்பாடுகள் - இராணுவத் தளபதி எச்சரிக்கை
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது.
இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டு கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
கோவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும்" - என்றார்.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri