அரசியல் ரீதியான முக்கிய தீர்மானம் அறிவிக்கப்படும்! முப்படையினரும் தயார் நிலையில்: சற்று முன்னர் சவேந்திர சில்வா அறிவிப்பு
புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை நாட்டில் அமைதியை பேணுவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் விசேட சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
நாட்டில் உள்ள மக்கள், இளைஞர்கள் நிலைமை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வரை அமைதிகாக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆகவே முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக கடமையாற்றுமாறும் பொதுமக்களிடத்தில் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படும் வரை நாட்டின் அமைதி நிலையை பேண முப்படையினரும் பொலிஸாரும் தயார் நிலையில் உள்ளனர்.
சபாநாயகர் தலைமையில் சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறுவதாகவும், அது குறித்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று இதன்போது எடுக்கப்படும் எனவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri