சஷீந்திர ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மக்கள் சொத்து சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்சவிற்கு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு கோரிக்கை விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தார்.
சஷீந்திர ராஜபக்ஷ, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சஷீந்திர மீது, அரசு சொத்து சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் “ஊழல்” குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுப்படி, மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் கட்டப்பட்டிருந்த அவரது அரசியல் அலுவலகம் “அரகலய” போராட்டத்தின் போது தாக்கி அழிக்கப்பட்டபோது, அதற்கான நஷ்டஈடாக 88 லட்சத்து 50 ஆயிரம் ரூபா சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.



