சர்வதேச சந்தையில் தங்கம் - வெள்ளி விலைகளில் கடும் சரிவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 டொலருக்கு கீழ் சரிந்து, ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் இல்லாத மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
இதன்படி, நேற்று தங்கம் 3.5 வீதம் சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,880 டொலராகப் பதிவானது. வாராந்த அடிப்படையில் தங்கத்தின் விலை சுமார் 3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளியின் விலை 6 வீதம் சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 48.95 டொலராகக் குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் வெள்ளி விலை சுமார் 9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பும் பத்திர வருவாயும் குறைந்த போதிலும் தங்கத்தின் விலை சரிவைச் சந்திப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம்
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் டிசம்பர் மற்றும் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் தங்கச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஈரான் போர் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்திருப்பதும் தங்கத்தின் விலை மீட்சியடைவதற்குத் தடையாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் வாரத்தில் அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் மற்றும் இடைக்காலத் தேர்தல் தொடர்பான முன்னேற்றங்கள் தங்கம், வெள்ளி விலைகளில் மேலும் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பௌத்த பிக்குவாக வேடமிட்டு நடைபயணம்! சில மணி நேரங்களிலேயே அம்பலமான மொட்டுக் கட்சி அரசியல்வாதியின் அடையாளம்