இலங்கைக்கு வரவுள்ள சாந்தன் - செய்திகளின் தொகுப்பு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் சொந்த நாட்டிற்கு தன்னை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு நடத்திய நிலையில் அவர் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சாந்தனை அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களுக்கு அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவித்தன. இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வரும் நாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri