யாழ். வடமராட்சியில் மணல் அகழ்வை நிறுத்தக் கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியிலே மணல் அகழ்வை நிறுத்தக் கோரி கிராம மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று(09.02.2024) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
மணல் விநியோக நடவடிக்கை
அம்பன் பகுதியிலே 2010 ஆண்டு தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் குறைந்தது 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட மணல் மேடுகள் அழிக்கப்பட்டு அந்த பிரதேசம் நீர்த்தடாகமாக காணப்படுகின்றது.
இந்நிலையில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்த ஒரு சிலரால் மணல் விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை நிறுத்துமாறு கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திலே முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன்,கிராம இளைஞர் யுவதிகள் என பலரும் ஈடுபட்டடுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan