கொழும்பில் முன்னாள் அமைச்சரை கதற விட்ட மகன்
கொழும்பில் சீன நாட்டவர் ஒருவருக்கு சொந்தமான பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது மகனான அனுத ஜனாதித் பண்டாரவிற்கு எதிராக எந்தவொரு சாட்சிகளும் இல்லை எனத் தனது சட்டத்தரணிகள் தெரிவித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை
“என் மகன் மட்டுமல்ல, தவறு யார் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

ஆனால் கடந்த சில நாட்களாக பல பொய்யான செய்திகள் வெளிவருகின்றமை குறித்து மிகவும் வருத்தத்தில் உள்ளேன்.
எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது. அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் வந்துள்ளோம்.
எனது மகனுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முறையான சாட்சியங்கள் எதுவும் இருக்கவில்லை என எனது சட்டத்தரணிகள் என்னிடம் கூறினார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கில் இருந்து நாம் விடுபடுவோம்.
பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கு எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.