விரைவில் பிரதிப் பொலிஸ் மா அதிபராகவுள்ள ஷானி அபேசேகர
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை (Shani Abeysekara ) பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, கடந்த கோட்டாபய ஆட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
முன்வைத்திருந்த கோரிக்கை
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அவர் பொலிஸ் சேவையில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், அவர் கடைசியாக வகித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
எனினும் அவரது கனிஷ்ட அதிகாரிகள் தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருக்கும் நிலையில், அவர்களின் கீழ் பணியாற்றுவதில் ஷானி அபேசேகரவுக்கு சிற்சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.
அதனைக் காரணம் காட்டி, ஷானி அபேசேகரவுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி உயர்வு வழங்க பொலிஸ் திணைக்களம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது
அதன் பிரகாரம் ஷானி அபேசேகர விரைவில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
