என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது : ஷானி அபேசேகர
தம்மை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abeysekara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஷானி அபேசேகர உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாகன விபத்து ஒன்றின் மூலம் தம்மை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனு பரிசீலனை
எனவே தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினை பலப்படுத்துமாறு மனுவில் மேலும் கோரியுள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதகொட ஆகியோரினால் இந்த மனு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை எதிர்வரும் 9ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri