குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக ஷானி அபேசேகர நியமனம்
குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணையத்தின் ஒப்புதலின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர, கடந்த கோட்டாபய ஆட்சியின் போது அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
விசேட அமைச்சரவை அங்கீகாரம்
இதனையடுத்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அவரை ஒருவருட ஒப்பந்த காலத்தின் அடிப்படையில் மீண்டும் பொலிஸ் திணைக்கள சேவைக்கு உள்ளீர்த்து, முக்கிய பல வழக்குகளின் விசாரணைகளை அவர் வசம் ஒப்படைத்திருந்தது.
அத்துடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி ஓய்வு பெற்றுக் கொண்ட ஷானி அபேசேகர, விசேட அமைச்சரவை அங்கீகாரத்தின் மூலம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலதிக தகவல் - அனாதி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam