ஷேன் வோர்ன் தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை! தாய்லாந்து பொலிஸார் தகவல் (PHOTOS)
புகழ்பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் தங்கியிருந்த சொகுசு விடுதி அறையின் தரையிலும், குளியல் துண்டுகளிலும் "இரத்தக் கறைகள்" காணப்பட்டுள்ளதை தாய்லாந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஷேன் வோர்ன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் தாய்லாந்து ஊடகத்தை மேற்கோள்காட்டி இன்று (6) தாய்லாந்து பொலிஸார் ஷேன் வோர்ன் தங்கியிருந்த அறையில் தரையில் மற்றும் குளியல் துண்டுகளில் இரத்தம் இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
"அறையில் அதிக அளவு இரத்தம் காணப்பட்டுள்ளதாகவும் என்று உள்ளூர் மாகாண காவல்துறையின் தளபதி சதிட் போல்பினிட் தாய்லாந்து ஊடகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் " கார்டியோபுல்மோனரி (CPR) செய்யப்பட்டதன் போது இறந்தவர் இருமல் திரவமாகி இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Koh Samui's Bo Phut காவல் நிலைய கண்காணிப்பாளர் யுட்டானா சிரிசோம்பாவின் கூற்றுப்படி, வார்ன் சமீபத்தில் "அவரது இதயத்தைப் பற்றி மருத்துவர் ஒருவரையும் அணுகியிருந்தார்" எனவே அவரது மரணத்தை சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதுவதை நிராகரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் பொலிஸாரின் தகவலின்படி, வார்னின் நண்பர் ஒருவர் மாலை 5 மணியளவில் ஆம்புலன்சுக்காகக் காத்திருக்கும் போது வார்னுக்கு CPR ஐ செய்யத் தொடங்கியுள்ளார் என தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஷேன் வோர்னின் நிர்வாகம் பின்னர் அவரது மரணத்தை உறுதிப்படுத்த ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.