மகிந்தவுடனும் மைத்திரியுடனும் கைகோர்த்த சாணக்கியன்! யார் துரோகி - சிதம்பரம் கருணாநிதி
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவுஸ்திரேலியாவிலிருந்து யுத்தத்தையும் தமிழ் மக்கள் அழிவதையும் பார்த்து விட்டு மகிந்தவுடன் ஒன்றிணைந்தவர், அப்படியென்றால் யார் உண்மையான துரோகி என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சாணக்கியன் தமிழ் மக்களுக்காக போராடியவர் அல்ல. அரசியலுக்கு வந்த பின்னர் தமிழர்களுக்கான போராட்டங்களில் கலந்து கொண்ட அவர் அதற்கு முன்னர் எங்கே சென்றார்.
அதுமட்டுமல்லாது மாவீரர் தினத்திற்கு எதிராக மகிந்தவுடனும், மைத்திரிபாலவுடனும் சாணக்கியன் இணைந்திருந்தார். இப்படிப்பட்ட சாணக்கியன் தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்றும் சிதம்பரம் கருணாநிதி கேள்வியெழுப்பினார்.
முழுமையான நேர்காணலை கீழ்வரும் காணொளியில் காண்க..
