இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடைமுறைக்கு வரும் வரி
இலங்கை வரலாற்றில் முதன்மறையாக முட்டைகளுக்கு இன்று முதல் 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முட்டை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று சங்கம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படுகிறது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
வற் வரி
முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் வற் வரிக்கு உட்பட்டது எனவும், இது முட்டைத் தொழிலில் சரிவுக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது, சந்தையில் முட்டையின் விலை சரிவைக் காட்டி வருகிறது, ஒரு முட்டையின் சில்லறை விலை 25 முதல் 30 ரூபாய் வரை உள்ளது.
ஒரு முட்டை உற்பத்தி செலவை கூட ஈடுகட்ட முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சில முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
