சாணக்கியனின் மட்டக்களப்பு காரியாலய பெயர் பலகை அடையாளம் தெரியாத நபர்களால் கிழித்து அழிப்பு (video)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அடையாளம் தெரியாத விசமிகளால் நேற்றிரவு கிழித்து செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு காரியாலயம் கடந்த 2 வருடங்களாக அமைக்கப்பட்டு மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு காரியாலயம் பூட்டப்பட்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் தாங்கிய காரியாலய சந்திப்பு திகதியிடப்பட்ட பெயர்பலகையில் ஒட்டப்பட்டிருந்த பெனரை அடையாளம் தெரியாத விசமிகள் கிழித்து எடுத்துச்சென்றுள்ளதாக காரியாலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
Tamizha Tamizha: வீட்டில் அழுக்கு நைட்டியுடன் இருக்கும் அம்மா! அலுவலகத்தில் அசிங்கப்படுத்திய மகன் Manithan