ஷம்மி சில்வா எதிர்வரும் புதன் விலகுகிறார்
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா எதிர்வரும் புதன்கிழமை (29) தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விசேட அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிர்வாக மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்படவுள்ள தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கு, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்னவை நியமிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

ஷம்மி சில்வா முதன்முதலில் 2019 பெப்ரவரி மாதம் நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் வெற்றி பெற்று இந்தப் பதவிக்குத் தெரிவானார்.அந்தத் தேர்தலில் அவர் ஜயந்த தர்மதாசவை தோற்கடித்தார்.
அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரத்தை அவர் தன்வசம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் பதவி விலகல் தொடர்பில் சிறிலங்கா கிரிக்கட் தரப்பிலிருந்தோ எரான் தரப்பிலிருந்தோ எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan