ரணில் விக்ரமசிங்க பயங்கரவாதியாக செயற்படுகின்றார் - சக்திவேல் (Video)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயங்கரத்தையும் அதன் கொடிய முகத்தையும் தற்போது தெற்கு மக்கள் அறியக்கூடிய வகையில் இருக்கின்றார்கள் என பேராயர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களை பார்வையிடுவதற்கு சென்றிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களின் அவலநிலை
அவர் மேலும் கூறுகையில், “2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது இன்று வரையில் வழக்கு தொடரப்படவில்லை. அவர்களின் குற்றங்கள் என்னவென்றும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் ஏன் தங்களை சிறையில் வைத்திருக்கின்றார்கள் என கேள்வி எழுப்புகின்றார்கள்.
இளைஞர்கள் மட்டுமல்ல பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 40 இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை பாதுகாக்கும் பயங்கரவாதிகள் இந்த நாட்டில் இருக்கின்றார்கள்” என அவர் குறிப்பிட்டார்.

ரணில் போராட்டக்காரர்களை வேட்டையாடுகின்றார்
மேலும் “தற்போது ரணில் விக்ரமசிங்க பயங்கரவாதியாக இருந்து வீதியில் இருந்து போராடியவர்களை வேட்டையாடிக்கொண்டு இருக்கின்றார். இந்த வேட்டை நாய் இந்த ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இதற்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுபவர்களையும் அரசாங்கத்தில் இருந்து துரத்த வேண்டும். அதற்கான மக்கள் சக்தி எழ வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது அரசியல் கைதிகள் மற்றும் உண்ணாவிரத கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கின்றோம் எனவும்
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைபிலுள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்ல தெற்கில் எதிர்கட்சியிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றினைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri