வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் சிக்கினார்
வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் ஒருவர் காலிப் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி அருகே, ஹபராதுவ, பீல்லகொட சைத்தியலங்கார விகாரையில் வழிபாடு செய்ய சென்ற உக்ரேனிய சுற்றுலாப் பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முறைப்பாட்டின் அடிப்படையில் கைது
குறித்த பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் ஒருவரை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள இந்த சுற்றுலாப் பெண், அடிக்கடி பௌத்த விகாரைக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றார்.
தப்பியோடிய சந்தேகநபர்
கடந்த 21ஆம் திகதியும் அவர் வழமைபோன்று விகாரைக்குச் சென்று போதி மரத்தை வழிபட்டுள்ளார். அப்போது, குறித்த சந்தேகநபரான இளைஞர் அவரிடம் வந்து புத்தர் சிலை அமைந்துள்ள கூண்டுக்குள் வந்து வழிபடுமாறு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த இளைஞனின் அழைப்பின் பிரகாரம், புத்தர் சிலை அமைந்துள்ள கூண்டை வழிபட்டுவிட்டு வெளியில் வந்த சுற்றுலாப் பெண்ணை, சந்தேகநபரான இளைஞன் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பெண் பயணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகநபரான இளைஞர் ஹபராதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |