கெஹல்பத்தர பத்மே மற்றும் இஷாரா செவ்வந்தியின் இரகசிய உரையாடல்கள்! சிஐடி வெளியிட்ட தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் கெஹல்பத்தர பத்மே மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகியோரை தடயவியல் நிபுணரிடம் அனுப்புவதற்கு, கொழும்பு குற்றப்பிரிவு அனுமதி கோரியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகமவிடம் கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (2) அனுமதி கோரியுள்ளது.
சந்தேகநபர்களுக்கும் இடையிலான உரையாடல்கள்
இரு சந்தேகநபர்களுக்கும் இடையிலான உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் அடங்கிய குறுவட்டு ஒன்று ஏற்கனவே தடயவியல் நிபுணருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, ஒலிப்பதிவுகளில் உள்ள குரல்களை ஆய்வு செய்வதற்காக, 15 ஆவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் 18 ஆவது சந்தேகநபரான கெஹல்பத்தர பத்மே ஆகியோரை தடயவியல் நிபுணரிடம் அனுப்ப நீதிமன்றம் அனுமதி கோரியுள்ளது.
கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசி குறித்த தடயவியல் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இந்த குற்றத்தை செய்வதற்கான திட்டங்கள் மற்றும் அதனை் பின்னரான நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரே ஒரு சந்தேகநபர் மட்டுமே திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையானதுடன், ஏனைய சந்தேகநபர்கள் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
you may like this video