பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பலத்த மழை
அதேபோல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam