இன்றிரவு வரை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் மின்னல் எச்சரிக்கை
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு மேலும் 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (05) பிற்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என்று வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மின்னலால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க நடவடிக்கை
அதன்படி, பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின் போது மின்னலால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆராய்ச்சி மத்திய நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றது.
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam