பலத்த மின்னல் தாக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இவ்வாறு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இந்த எச்சரிக்கை இன்று (08) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
