இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு! - Ttraits Times அறிக்கை
இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாக Ttraits Times செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகள் காலியாக உள்ளதாகவும், உணவகங்களில் உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது டொலர் வருமானம் குறைவடைந்தமையின் காரணமாக வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிவாயு, மண்ணெண்ணெய், மீன், பருப்பு, அரிசி மற்றும் பரசிட்டமோல் போன்ற அனைத்தையும் கொள்வனவு செய்வதற்கு மக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதிலிருந்து இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வருகிறது. இலங்கை இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி மற்றும் திவால்நிலையை எதிர்கொள்கிறது.
இலங்கையர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையையும் 14 சதவீத பணவீக்கத்தையும் எதிர்கொண்டுள்ள நிலையில், பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதை விட அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.
சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடம் இருந்து எமக்கு அதிக கடன் உள்ளது என ஜனாதிபதியின், சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்துவதன் மூலம் குறைந்த உலகளாவிய கடன் மதிப்பீட்டை நிவர்த்தி செய்ய இலங்கை விரும்புகிறது.
ஆனால் நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் அதற்குப் பதிலாக அரிசி, பால் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
முழுமையான அறிக்கையை பார்வையிட...