கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சஹாரா பாலைவனம்
தென்கிழக்கு மொரோக்கோவில் பெய்த கனமழையின் தாக்கம் சஹாரா பாலைவனத்தை வெள்ளத்தில் மூழ்கச்செய்துள்ளது.
குறித்த கனமழையானது சராரியை விட அதிகம் என மொரோக்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மொரோக்கோ தலைநகர் ரபாத்தில் இருந்து 450 கிமீ தெற்கே அமைந்துள்ள டகோனைட் கிராமத்தில் செப்டம்பர் மாதம் ஆரம்பமான பருவநிலை மாற்றமானது தொடருகின்ற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம்100 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகளவான மழை
இதனிடையே, ஜகோராவிற்கும் டாடாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த ஆறுகள் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சஹாரா பாலைவனம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்ற புகைப்படங்களை மொரோக்கோ வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் அதிகளவான மழை பெய்து 30 முதல் 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சஹாரா பாலைவனம்
மேலும் சஹாரா பாலைவனம், வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வெள்ளம் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புவி வெப்பமடைதல் மற்றும் தீவிர வானிலை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த அளவிலான புயல்கள் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |