டெல்லியில் இடிந்து விழுந்த 6 மாடி மாணவர் விடுதி.. 50இற்கும் மேற்பட்டோர் இடிபாடுக்குள்
தென்மேற்கு டெல்லியில் 75 படுக்கைகள் கொண்ட 6 மாடி மாணவர் விடுதி கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் 1:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பலர் ஆபத்தில்..
தகவலறிந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#BREAKING: 🇮🇳 PG hostel caves in at Satya Niketan, Delhi, India
— Twilight (@TwilightDewy) September 6, 2026
Officials say none confirmed dead yet but unconfirmed reports claim three dead, two girls and one boy, with several rescued and three critically hurt at AIIMS#Delhi #SatyaNiketan #BuildingCollapse pic.twitter.com/AZkxrt0YCp
இதுவரை சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள கட்டிடங்களும் காலியாக்கப்பட்டு, நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு முதன்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் பகல் நேர வெப்பநிலை! சுமார் ஒரு வாரத்திற்கு பதிவாகப்போகும் நிலைமை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam