நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் (video)
யாழ். பருத்தித்துறை - தும்பளை பகுதியில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (01.02.2023) பதிவாகியுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக காற்றினால் மரத்தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன.
இந்தன்போது கட்டடத்தின் கூரை தகடுகள் சேதமடைந்தமையாலும், காற்றினால் தூக்கி வீசப்பட்டமையாலும் மழை நீரில் இயந்திரங்கள் நனைந்து பெறுமதி வாய்ந்த மரத்தளபாட உற்பத்தி இயந்திரங்கள், கணனிகள், நிழல்பட பிரதி உயந்திரங்கள், மின் இணைப்பு சாதனங்கள் என்பன சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரணைமடு
இந்நிலையில் இரணைமடு பகுதியில் தொடர் மழை காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் காலபோக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நெல்லிற்கான கேள்வி குறைந்துள்ள நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
விவசாயிகளிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் உரிய தரப்பு விரைந்து செயற்பட வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: எரிமலை
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கும் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக குச்சவெளி பிரதேசத்தில் ஏழு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நெல் அறுவடை காலமாக இருப்பதால் நெற் கதிர்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கடலை அன்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ளநீர் புகுந்துள்ளதாகவும் அதிகளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் கிராம உத்தியோகத்தர்களின்
ஊடாக திரட்டப்பட்டு வருவதுடன், மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக அடுத்த வாரம்
இதற்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ்
தெரிவித்துள்ளார்.
செய்தி: பதியுதீன் ஷியானா

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ News Lankasri

குக் வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. கண் கலங்கிய புகழ், சுனிதா Cineulagam
