மருத்துவரின் சம்பள பண மோசடி! நபர் ஒருவருக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள தண்டனை
நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல மோசடி குற்றங்களை மேற்கொண்டவர்களை பொலிஸார் கைது யெ்துள்ளனர்.
மருத்துவரின் சம்பள பணம் மோசடி
கொழும்பு தேசிய மருத்துவமனை மருத்துவர்கள் நால்வரின் சம்பளப் பணத்தை மோசடி செய்த நபருக்கு பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் சம்பளப் பிரிவில் கடமையாற்றிய முகாமைத்துவ உதவியாளரான என்.கிரிசாந்த பெர்னாண்டோ என்பவருக்கே இவ்வாறு தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
சுமார் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் தேசிய மருத்துவமனையில் கடமையாற்றிய அவர், 2003ம் ஆண்டு அங்கு கடமையாற்றிய நான்கு மருத்துவர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்திருந்தார்.
அதனையடுத்து சட்ட மா அதிபரினால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீண்ட காலம்கழித்து அவர் இன்றைய வழக்கு விசாரணையின் போது தன் குற்றத்தை ஏற்றுக்கொண்டிருந்தார் அதனையடுத்து அவருக்கு ஆறு வருட சிறைத்தண்டனை மற்றும் ஒரு கோடி அறுபத்தி ஆறாயிரம் ரூபா அளவிலான அபராதமும் விதிக்கப்பட்டது.
சிறுநீரக மோசடி
கொழும்பின் தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்றதாக கூறப்படும் சிறுநீரக மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைக் குழு நியமனம் பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் ஆறு விசேட மருத்துவ நிபுணர்கள் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் வசதிகுறைந்த மக்களின் சிறுநீரகங்களை மோசடியான முறையில் பெற்று வேறுநபர்களுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேற்குறித்த விசேட விசாரணைக்குழுவுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவிட்டுள்ளார்.
பருப்பு கொள்கலன்கள் மோசடி
கொழும்பின் பிரபல தனியார் நிறுவனமொன்று ஆறு கோடி ரூபா பெறுமதியான பருப்பு கொள்கலன்களை மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பருப்பு சந்தைப்படுத்தல் நிறுவனமான பல்க் பை கிராம்ஸ் தனியார் நிறுவனத்திடம் இருந்து கொழும்பின் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று பத்துக் கொள்கலன்களில் பருப்பை இறக்குமதி செய்து மோசடி செய்துள்ளது.
இது தொடர்பில் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான மனோஜ் துஷ்யந்த ராஜரத்ன கொடுத்த முறைப்பாட்டின் பேரில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பத்து கொள்கலன்களில் சுமார் ஆறு கோடி ரூபா பெறுமதியான பருப்பு மட்டுமன்றி அதனை சுத்தப்படுத்துவதற்காக இரண்டு கோடி ரூபா பெறுமதியான இயந்திர உபகரணங்களையும் குறித்த நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை பரிசீலிக்கவும் நீதிமன்ற உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
