முத்துநகர் விவசாயிகளின் ஏழாவது சத்தியாக்கிரகப் போராட்டம்
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகளின் ஏழாவது சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்றைய தினமும் (23.09.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இலங்கை துறைமுக அதிகாரசபையினர் மக்களது விவசாய காணிகளை அபகரித்து சூரிய மின்சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு வழங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நிலத்தை மீள தருமாறு கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இது குறித்து விவசாய சம்மேளன செயலாளர் தெரிவிக்கையில், ஐம்பது வருட காலமாக நாம் விவசாயம் செய்து வந்த எங்கள் நிலத்தை அபகரித்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக செய்து வந்த வயல் நிலத்தை அபகரித்துள்ளனர். இதனை மீள பெற்று தாருங்கள் என கோரியுள்ளார்.








விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
