ஏழு தமிழர்களின் விடுதலை! தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் நேற்று இடம் பெற்றுள்ளது. முன்னாள் பாரத பிரதமர் ராஜூவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் பல வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் சந்தித்திருந்தாலும், தமிழக அரசின் தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
தற்பொழுது வரை 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri