ஏழுமாத சட்ட போராட்டம் வென்றது, பாதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் குரல் கொடுப்போம்: சட்டத்தரணி சுகாஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட 10 பேரும் இன்றையதினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த 10 பேரை பொலிஸார் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது என மன்றுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது பக்க நியாயங்களைத் தெரியப்படுத்தினோம். ஏழு மாத காலமாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகச் சட்டப் போராட்டம் நடத்தினோம்.
எமது பக்க நியாயங்களைக் கேட்டறிந்த மன்று அவர்களைப் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.
நமது சட்ட போராட்டத்திற்கு எம்மோடு கைகோர்த்த சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல், ஜெசிங்கம், மற்றும் நமது முஸ்லிம் சகோதர இனத்தைச் சேர்ந்த ரம்சி மற்றும் றிப்கான் ஆகியோருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகவே பாதிக்கப்பட்ட தமிழன் எங்கிருந்தாலும் அவர்களுக்காக நீதி கிடைக்கத்
தொடர்ந்தும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam