திருகோணமலை பகுதியில் ஏழு அடி நீளமான முதலை கிணற்றிலிருந்து மீட்பு(Video)
திருகோணமலை மாவட்ட கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் கட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து முதலை ஒன்றை கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று (30.09.2023) மாலை கந்தளாய் - சூரியபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த முதலை சுமார் எழு அடி நீளம் கொண்டுள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகள்
காட்டுப் பகுதிக்கு நாவைப்பழம் பறிக்கச் சென்ற இளைஞர்கள் குழு முதலையை கண்டு சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பொலிஸார் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று பாழடைந்த கிணற்றில் விழுந்து கிடந்த முதலையை மீட்டெடுத்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மகாவலி ஆற்றில் விடப்பட்டதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |