முல்லைத்தீவு - தேராவிலில் இருந்து இடம்பெயர்ந்த மக்களளின் பிரச்சினைக்கு தீர்வு
தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் முகமாக முல்லைத்தீவில் வெள்ள நீர் முகாமைத்துவ செயற்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்திட்டம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் இன்று (25.02.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைக்கு தீர்வு
தேராவில் குளத்து நீர் நிரம்பி மேலதிக நீரினால் குளத்திற்கு அருகில் இருந்த 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் இருந்துவரும் நிலையில் குறித்த திட்டத்தினால் இந்த மக்களது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமா மகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தன், முன்னாள் அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம், கமநல சேவை பணிமனை உதவிப்பணிப்பாளர் பரணிதரன், அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சி.கோகுலராஜா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் க.அரங்கன் ,வனவளத் பணிமனை அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |