பிரித்தானியர் ஆட்சி காலத்தில் நாட்டப்பட்ட மரத்திற்கு விசமிகளால் தீ வைப்பு
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற கட்டிடத்திற்கு முன்னாள் உள்ள பிரித்தானியர் ஆட்சி காலத்தில் நாட்டப்பட்ட 120 வருடத்துக்கு மேலான பாரிய வாகை மரத்தின் அடியின் கீழ் விசமிகளால் தீ வைத்துள்ளதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டிடத்துக்கு முன்னாலும் பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்துக்கும் முன்னால் வீதியில் சுமார் பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் நடப்பட்ட வாகை மரம் இன்று சுமார் 120 வருடங்களுக்கு மேலாக தளைத்தோங்கி 10 அடி சுற்றளவைக் கொண்டு விருட்சமாக வளர்ந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அந்த வீதியில் பல பாரிய மரங்கள் வளர்ந்து வருகின்றதுடன் அந்த மரங்களின் நிழலின் கீழ் பலர் சென்று களைப்பாறி வருவதுடன் அந்தபகுதி மிகவும் ஒரு சோலைவனமாக இருந்து வருகின்றது.
பொதுமக்கள் கடும் விசனம்
இவ்வாறாக இருக்கும் இந்த மரத்தை படவைத்தது அழித்தொழிக்கும் நடவடிக்கையாகவே சில விசமிகள் திட்டமிட்டு மரத்திற்கு தீவைத்துள்ளதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த மரம் மட்டு மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ளது இதனை மாநகரசபை கவனிக்குமா? சுற்றுச் சூழல் அதிகாரிகள் கவனிப்பார்களா ? மரத்தை பாதுகாப்பார்களா? எது எவ்விதமாக இருந்தாலும் இந்த மரத்துக்கு தீவைத்து அழித்தொழிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்தி இதனை பாதுகாக்க அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




மன்னர் காலத்து இரும்பு உள்ளாடை: ராணிகளின் ரகசியம் உண்மையா? வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி! News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
