கொழும்பு புறநகர் பகுதியில் தீவிரமடைந்த மோதல் - அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ வைப்பு
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் எல்லை மீறி சென்றதனால் மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றிற்கு இரவு வேளையில் சிலர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், பொருள் சேதம் குறித்து இதுவரை கணக்கிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையின் பிரபலமான வீதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த தாக்குதலின் அடிப்படையில் மொதரவில அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த இனந்தெரியாத சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், மக்கள் வசிக்கும் மொதரவில அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மொரட்டுவை மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் வந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் தீயானது பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொதரவில அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: ஹார்முஸ் நீரிணை திறப்புக்கு நம்பிக்கை News Lankasri
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri