வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு
வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இரு தினங்கள் பால்நிலை சமத்துவம் தொடர்பில் குறித்த செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
நீதிச்சேவை அமைச்சின் கீழ் உள்ள மத்தியஸ்தர் சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் ஆசிய வங்கியின் நிதி உதவியில் குறித்த செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது மத்தியஸ்தர்கள் சபையின் சட்ட ஆலோசகர் சிரேஷ்ட சட்டத்தரணி திருநாவுக்கரவு, மத்தியசஸ்தர் சபைகள் பயிற்சிவிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் வளவாளராக கலந்து கொண்டு மத்தியஸ்தர் சபையில் ஆண், பெண் சமத்துவம் பேணல், அதனை எவ்வாறு கையாளுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டது.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மத்தியஸ்தர் சபை பொறுப்பு உத்தியோகத்தர் விமல்
தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் வவுனியா மாவட்ட உதவிச் செயலாளர்
திருமதி மு.சபர்ஜா, வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர், உப
தவிசாளர், மத்தியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



